Published:Updated:

உலகில் முதல்முறை: உருகுவேயில் கஞ்சாவுக்கு அனுமதி!

உலகில் முதல்முறை: உருகுவேயில் கஞ்சாவுக்கு அனுமதி!
உலகில் முதல்முறை: உருகுவேயில் கஞ்சாவுக்கு அனுமதி!
உலகில் முதல்முறை: உருகுவேயில் கஞ்சாவுக்கு அனுமதி!

மாண்டிவிடியோ: உலகிலேயே முதன்முறையாக உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உலகின் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்நிலையில், உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேறியது. தற்பொழுது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.

##~~##
கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட கஞ்சா உபயோகிப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம் எனவும், உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே கஞ்சா விற்கப்படும் எனவும், கஞ்சா பயன்படுத்துகிறவர்கள் தங்கள் பெயரை அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், மாதம் ஒன்றுக்கு அவர்கள் எவ்வளவு கஞ்சா வாங்குகிறார்கள் என்பது கண்காணிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர், ஒருவர் தனது வீட்டில் ஆண்டுக்கு 6 கஞ்சா செடி வளர்க்கலாம் எனவும், கஞ்சா புகை பிடிப்போர் விடுதிகளில் ஆண்டுக்கு 99 கஞ்சா செடிகள் வளர்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உருகுவே செனட் சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாதம் முதல் புதிய அனுபவத்தைப் பெறப்போகிறோம். இது பெரிய கலாச்சார மாற்றத்துக்கு வித்திடும். இதன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தல் முடிவுக்கு வரும்’’ என்றார்.