Published:Updated:

அரசியலுக்காக மீனவர்களை ஜெயலலிதா பணயம் வைத்துள்ளார்: இலங்கை குற்றச்சாட்டு

Vikatan Correspondent

கொழும்பு: தமது அரசியல் நோக்கத்துக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீனவர்களை பணயக் கைதிகளாக வைத்துள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் சரத்குமார வீரக்கோன், "இந்திய மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இலங்கை மீனவர்களை ஜெயலலிதா தடுத்து வைத்துள்ளார்.

##~~##
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் கோரிக்கையாக உள்ளது.

இதனை உறுதிப்படுத்திக்கொள்வற்காகவே அவர் தமிழக மீனவர்களை இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறுவதற்கு அனுமதிக்கிறார். எனவே இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையிட வேண்டும்" என்றார்.