Published:Updated:

வட மாகாண சபை தீர்மானங்களை நிராகரித்தது இலங்கை!

Vikatan Correspondent
வட மாகாண சபை தீர்மானங்களை நிராகரித்தது இலங்கை!
வட மாகாண சபை தீர்மானங்களை நிராகரித்தது இலங்கை!
வட மாகாண சபை தீர்மானங்களை நிராகரித்தது இலங்கை!

கொழும்பு: வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு முக்கிய தீர்மானங்களையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு பதிலாக தமிழர் ஒருவரை மாகாண ஆளுனராக நியமிக்க வேண்டும், வடக்கு ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. கே.சர்வேஸ்வரன் என்ற உறுப்பினரால் இந்தத் தீர்மானம் வழிமொழியப்பட்டுள்ளது.

##~~##
வடக்கின் ஆளுநராக வடக்கைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
வட மாகாண சபையின் நிர்வாகம், அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இரண்டு தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.