Published:Updated:

இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம்!

Vikatan Correspondent
இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம்!
இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம்!
இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம்!

சென்னை: தமிழக மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையின் செயலுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ''இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, அவர்களின் படகுகளை கைப்பற்றுவது, சிறை பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

கடந்த ஓரிரு தினங்களில் நூற்றுக்கணக்கானவர்களை சிறை பிடித்து இருப்பது ஏற்க முடியாது. தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

##~~##
இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, இந்த மாத இறுதியில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இது சம்பந்தமாக தமிழக அரசுடன் பேசப்பட்டு வருகிறது. இதில் நிரந்தர தீர்வு ஏற்படும்" என்றார்.