Published:Updated:

'பாக். பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார்'

இஸ்லாமாபாத், ஜூன் 4,2011

'பாக். பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார்'

மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவரும், பாகிஸ்தானின் பயங்கரவாத முக்கியத் தலைவருமான இலியாஸ் காஷ்மீரி தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ##~~##

அமெரிக்க படையினரின் குண்டுவீச்சில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுள் ஹர்கத்-உல் ஜிஹாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலைவரான இலியாஸ் காஷ்மீரியும் ஒருவர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இலியாஸும் ஒருவரா என்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் இன்னும் உறுதி செய்து அறிவிப்பு வெளியிடவில்லை.