Published:Updated:

13 லட்சம் பேருக்கு உதவித்தொகை திடீர் நிறுத்தம்: ஒபாமா அதிரடி

விகடன் விமர்சனக்குழு
13 லட்சம் பேருக்கு உதவித்தொகை திடீர் நிறுத்தம்: ஒபாமா அதிரடி
13 லட்சம் பேருக்கு உதவித்தொகை திடீர் நிறுத்தம்: ஒபாமா அதிரடி
13 லட்சம் பேருக்கு உதவித்தொகை திடீர் நிறுத்தம்: ஒபாமா அதிரடி

வாஷிங்டன்: வேலையில்லாதவர்கள் 13 லட்சம் பேருக்கு கொடுத்து வந்த மாதாந்திர உதவித்தொகையை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், வேலையில்லாதவர்கள் 13 லட்சம் பேருக்கு கொடுத்து வந்த மாதாந்திர உதவித்தொகையை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

வேலையில்லாதவர்கள் மாதந்தோறும் 72 ஆயிரம் ரூபாய் பெற்று வந்தது நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

##~~##
கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த உதவித்தொகை நிறுத்தம் மூலம் இம்மாகாணத்தில் மட்டும் ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகயுள்ளது.
இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை குறையும் என்றாலும் மக்களின் வாங்கும் திறனும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.