Published:Updated:

தமிழக பேரவை தீர்மானத்தால் கவலையில்லை:இலங்கை

கொழும்பு, ஜூன் 9,2011

தங்கள் நாட்டின் மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒரு பொருட்டாக கருத வேண்டிய அவசியம் இல்லை என்று என்று இலங்கை அரசு கருத்து தெரிவித்துள்ளது. ##~~##

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இலங்கையின் அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல இன்று கூறியது:

"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக சிறந்த நிலையிலான நட்புறவு நிலவி வருகின்றது.

அரசியல் ரீதியாக எந்த வகையிலான பிரச்னை ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை முதன்மைப்படுத்தி பேச்சுவார்த்ததை நடத்தி, அதன் மூலம் நல்ல தீர்வுகளை கண்டுள்ளோம்.

இந்தியாவின் மாநில ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அது, அவர்களின் அரசியல் நிலைப்பாடு.

அது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டே எமது அடுத்த கட்ட செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்," என்றார் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வல்ல.