Published:Updated:

26/11.. ராணா குற்றமற்றவர்: யு.எஸ். கோர்ட் தீர்ப்பு

சிகாகோ, ஜூன்.10,2011

26/11.. ராணா குற்றமற்றவர்: யு.எஸ். கோர்ட் தீர்ப்பு

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் கனடா வாழ் பாகிஸ்தானியரான தஹவ்வுர் ஹுசைன் ராணா குற்றமற்றவர் என அமெரிக்க நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

எனினும், டென்மார்க் தாக்குதல், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதற்காக அவரை குற்றவாளி என சிகாகோ நீதிமன்றம் அறிவித்தது. ##~~##

அமெரிக்காவில் பயங்கரவாதி ஹெட்லியுடன் பிடிபட்டவர், ராணா. இருவரும் மும்பை தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்டவர்கள்.

கடந்த 12 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த சிகாகோ நீதிமன்றம், மும்பை தாக்குதல் வழக்கில் தன்னை குற்றமற்றவர் என அறிவித்தது.

அதேவேளையில், முகமது நபியை கேலி செய்யும் வகையில் கார்ட்டூன்களை வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை மீது தாக்குதல் நடத்த சதிதிட்டமிட்ட வழக்கில் அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் ராணா அதிர்ச்சி அடைந்ததாக நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ராணாவின் மனைவியும், அவரது 2 மகள்களும் கண்ணீர்விட்டு அழுதனராம்.

லஷ்கர் பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியது மற்றும் டென்மார்க் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது ஆகிய 2 குற்றச்செயல்களில் ராணா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராணாவின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில் ராணா குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார்.