Published:Updated:

இலங்கைக்கு எதிரான முக்கிய சாட்சியங்கள்: அமெரிக்கா பதிவு!

Vikatan Correspondent
இலங்கைக்கு எதிரான முக்கிய சாட்சியங்கள்: அமெரிக்கா பதிவு!
இலங்கைக்கு எதிரான முக்கிய சாட்சியங்கள்: அமெரிக்கா பதிவு!
இலங்கைக்கு எதிரான முக்கிய சாட்சியங்கள்: அமெரிக்கா பதிவு!

கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது அந்நாட்டு ராணுவம் செய்த குற்றங்களை அமெரிக்க தூதரக அதிகாரி சாட்சியங்களோடு பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தின் இந்த போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வற்புறுத்தி வந்தன.

ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு முறை இந்த பிரச்னையில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவும் இந்த தீர்மானத்தை ஆதரித்திருந்தது.

இந்நிலையில், ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் 3வது முறையாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. அதற்கு முன்பாக, அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே.ராப், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் குறித்து ஆதாரங்களை திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கு பகுதியில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

##~~##
இது குறித்து கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் அமெரிக்க தூதர் தனது சுற்றுப்பயணத்தின்போது, இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்களிடம் இருந்து அவர் சாட்சியங்களை பதிவு செய்து, புகைப்பட ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.