Published:Updated:

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கிறது: இங்கிலாந்து குற்றச்சாட்டு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கிறது: இங்கிலாந்து குற்றச்சாட்டு!
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கிறது: இங்கிலாந்து குற்றச்சாட்டு!

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கிறது: இங்கிலாந்து குற்றச்சாட்டு!

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கிறது: இங்கிலாந்து குற்றச்சாட்டு!

இங்கிலாந்து: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக இங்கிலாந்து அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''இலங்கையில் கடந்த 3 மாதங்களில் மனித உரிமை பாதுகாப்பு விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

குறிப்பாக, காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற நவம்பர் மாதத்தில், பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கிறது.

##~~##
மனித உரிமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வடக்கு மாகாண மக்களுக்கு ராணுவம் அனுமதி வழங்கவில்லை. வடக்கு மாகாணத்திற்குச் சென்ற சேனல் 4 குழுவினருக்கு எதிராக போராடுமாறு ஒரு பிரிவினரை இலங்கை அரசே தூண்டிவிட்டுள்ளது.
தமிழ் மாணவர்கள் 5 பேரைக் கொன்ற சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் 12 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில், தமிழர்களை தண்டிக்கும் போக்கு தொடர்கிறது. கடந்த 3 மாதத்தில், இலங்கையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது" என்று அந்த அறிக்கையில் இங்கிலாந்து அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு