Published:Updated:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்!

விகடன் விமர்சனக்குழு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்!

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பில்கேட்சை நிறுவன தலைவராக கொண்ட 78 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா நியமிக்கப்பட்டு உள்ளார்.

46 வயதான இவர் ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 3வது தலைமை செயல் அதிகாரியாக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் 38 ஆண்டு கால வரலாற்றில், இந்தியர் ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்பது இதுவே முதல் தடவை ஆகும்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாதெள்ளா, 1992 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன் கிளவுடு அண்டு எண்டர்பிரைசஸ் குழுமத்தின் செயல் துணைத்தலைவராக பணியாற்றினார். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட சத்ய நாதெள்ளா, தலைமை பண்பை அந்த விளையாட்டின் மூலம் கற்றுக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

##~~##
மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ள அவருக்கு பில்கேட்ஸ் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்திருக்கிறார். மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, கூகுள் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சையின் பெயரும் அடிபட்டது. இறுதியில் சத்ய நாதெள்ளா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.