Published:Updated:

பொற்கோவில் தாக்குதல்: இந்தியாவுக்கு உதவியதாக இங்கிலாந்து ஒப்புதல்

பொற்கோவில் தாக்குதல்: இந்தியாவுக்கு உதவியதாக இங்கிலாந்து ஒப்புதல்
பொற்கோவில் தாக்குதல்: இந்தியாவுக்கு உதவியதாக இங்கிலாந்து ஒப்புதல்
பொற்கோவில் தாக்குதல்: இந்தியாவுக்கு உதவியதாக இங்கிலாந்து ஒப்புதல்

லண்டன்: பஞ்சாப் பொற்கோவில் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு, இங்கிலாந்து அரசு உதவியது உண்மைதான் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

1984ஆம் ஆண்டு சீக்கிய பொற்கோவில் தாக்குதலில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர் உதவியை நாடியதாக அண்மையில் சர்ச்சை உருவானது.

இது குறித்து உடனடியாக விசாரிக்க இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரன் உத்தரவிட்டிருந்ததார்.

'ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்' என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவத் தாக்குதலில் அந்நிய நாட்டின் உதவியை நாடியது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும் சீக்கியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கையின் போது சுமார் 400 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

##~~##
பொற்கோவில் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு,இங்கிலாந்து அரசு உதவியது உண்மைதான் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
ஆனால் அந்த உதவி ஆலோசனையாக மட்டுமே இருந்ததாகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
பொற்கோவில் தாக்குதலுக்கான திட்டமிடுதலின் ஆரம்ப கட்டத்தில்தான் இங்கிலாந்து அரசு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
எனினும், பொற்கோவில் தாக்குதலில் எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.