Published:Updated:

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 10 இந்தியர்கள் போட்டி!

Vikatan Correspondent
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 10 இந்தியர்கள் போட்டி!
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 10 இந்தியர்கள் போட்டி!
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 10 இந்தியர்கள் போட்டி!

வாஷிங்டன்: அமெரிக்க பொதுத் தேர்தலில் 10 இந்திய வம்சாவளிகள் போட்டியிட உள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யவும், சில மாநிலங்களின் கவர்னர் பதவிக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தேர்தலில் வேட்பாளராக குதிக்க 10 இந்திய வம்சாவளிகள் தீர்மானித்து இருக்கிறார்கள். இவர்களில் முக்கியமானவர் அமி பெரா ஆவார். தற்போது ஜனநாயக கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் மீண்டும் கலிபோர்னியா 7வது மாவட்ட தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அதேபோல், உபேந்திரா ஷிவுகுலா (நியூ ஜெர்சி), மானான் திரிவேதி (பென்சில்வேனியா), அமர்தீப் கலேகா (விஸ்கான்சின்), சுவாதி டான்டெகர் (லோவா), மஞ்சு கோயல் (இல்லியான்ஸ்) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில், கலிபோர்னியா 17வது மாவட்ட தொகுதியில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. ஜனநாயக கட்சி சார்பில் ரோ கன்னா, குடியரசு கட்சி சார்பில் வனிலா மாத்தூர் சிங் ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர், எதிர் கட்சிகளின் வேட்பாளராக மோத இருக்கும் இந்த 2 பேரும் இந்திய வம்சாவளிகள் ஆவர். ரோ கன்னா முன்னாள் துணை அமைச்சராக இருந்தவர். ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தில் தீவிர பங்கு வகித்தவர். வனிலா மாத்தூர் சிங் பிரபல பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், கமலா ஹாரீஸ் என்பவர் தெற்கு கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.

கலிபோர்னியா கவர்னர் பதவிக்கு, குடியரசு கட்சி சார்பில் நீல் கஷ்காரி போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் கவர்னராகும் 3வது இந்தியர் என்ற பெருமை பெறுவார். ஏற்கனவே பாபி ஜிண்டால் (லூசியானா), நிக்கி ஹாலே (தெற்கு கரோலினா) ஆகியோர் பதவி வகிக்கிறார்கள். இதனால், நீல் கஷ்காரி தேர்வு பெறுவதை இந்தியர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.