Published:Updated:

நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது: இலங்கை அறிவிப்பு

Vikatan Correspondent
நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது: இலங்கை அறிவிப்பு
நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது: இலங்கை அறிவிப்பு
நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உள்நாட்டு ரீதியான விசாரணைகளை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டுமெனவும் பரிந்துரை செய்துள்ளார் நவநீதம்பிள்ளை.

இந்நிலையில், நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நவநீதம்பிள்ளை ஒரு பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாகவும், நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையானது என்றும், தண்டனை விதிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.

வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், நவநீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கை தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளது.