Published:Updated:

இலங்கை மீது சர்வதேச விசாரணை: சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தல்

Vikatan Correspondent
இலங்கை மீது சர்வதேச விசாரணை: சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தல்
இலங்கை மீது சர்வதேச விசாரணை: சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தல்
இலங்கை மீது சர்வதேச விசாரணை: சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தல்

இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என (அம்னெஸ்டி) சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பது ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், போரின் போது இரு தரப்பினரும் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் நாள்தோறும் தங்களுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பொதுமன்னிப்பு சபைக்கான இந்தியாவின் பொறுப்பாளர் அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் மசோதாவை வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.அதில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.