Published:Updated:

நியூயார்க் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து!

Vikatan Correspondent
நியூயார்க் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து!
நியூயார்க் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து!
நியூயார்க் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் அருகில் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

நியூயார்க்கின், கிழக்கு ஹெர்லம் பகுதியின் 114வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பயங்கர வெடி வெடித்தது. இந்த வெடி விபத்தில் அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. மேலும், சக்திவாய்ந்த வெடிமருந்துகள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 150 வீரர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தற்போது 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில், மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.