Published:Updated:

16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!

16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!

16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!

16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!

16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!

Published:Updated:
16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!
16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை!

கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 16 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில்,  இலங்கை அரசு இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதுவும் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001 அன்று கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.

இதன் அடிப்படையில்,இலங்கை அரசு, அமெரிக்கா உட்பட கனடா, பிரிட்டன், நார்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்ய தீர்மானித்துள்ளது.

இந்த இயக்கங்களில் நியூயார்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்கும்.

இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள இயக்கங்கள்

1.தமிழீழ விடுதலை புலிகள்

2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு

3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு

4.பிரிட்டன் தமிழ் மன்றம்

5.உலக தமிழ் இயக்கம்

6.கனேடிய தமிழ் காங்கிரஸ்

7.ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

8.உலக தமிழ் மன்றம்

9.கனேடிய தமிழர்களுக்கான தேசிய பேரவை

10. தேசிய தமிழ் பேரவை

11.தமிழ் இளைஞர் அமைப்பு

12.உலக தமிழர் ஒருங்கமைப்பு குழு

13.தமிழீழ நாடு கடந்த அரசாங்கம்

14.தமிழீழ மக்கள் கூட்டம்

15.உலக தமிழ் நிவாரண நிதியம்

16.தலைமை காரியாலய குழு

ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்: