Published:Updated:

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்காக இங்கிலாந்து நெருங்கி செயல்படும்: கேமரூன்

Vikatan Correspondent

லண்டன்: இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச குழுவினருடன் இங்கிலாந்து நெருங்கிய நிலையில் செயல்படும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசியபோது இவ்வாறு கூறிய அவர், தம்மைப் பொறுத்தவரை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்றார்.

இந்த நடைமுறைகளே இலங்கை நிரந்தரமான இடம் ஒன்றை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றும், இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது தாம் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் யோசனைக்கு ஆதரவை கோரியதாகவும் கமரூன் தெரிவித்தார்.