Published:Updated:

விடுதலைப்புலிகள் 3 பேரை சுட்டுக் கொன்றது இலங்கை ராணுவம்!

கொழும்பு: விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம், சுந்தரலிங்கம் கஜீபன் மற்றும் அப்பன் என்ற 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் நெடுஞ்கேணி பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு, இலங்கை ராணுவம் நடத்திய சோதனையின்போது தப்ப முயன்றதால் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மூவரையும் வீட்டில் தங்க வைத்த குற்றத்திற்காக ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவரது 14 வயது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்ததாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு