Published:Updated:

மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தல்: ரஷ்ய உளவுத்துறை தகவல்!

Vikatan Correspondent
மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தல்: ரஷ்ய உளவுத்துறை தகவல்!
மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தல்: ரஷ்ய உளவுத்துறை தகவல்!
மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தல்: ரஷ்ய உளவுத்துறை தகவல்!

மாஸ்கோ: மாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தப்பட்டு பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளதாக ரஷ்ய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி பறந்து கொண்டிருந்தபோது கடந்த மாதம் 8 ஆம் தேதி அதிகாலை மலேசிய விமானம் திடீரென மாயமானது. அந்த விமானம் பற்றி தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. இருப்பினும், அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாகக் கருதி, அதன் கறுப்புப்பெட்டியை இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்த கடல் பகுதியில் விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருவதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. விரைவில் விமானம் கண்டு பிடிக்கப்பட்டுவிடும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாயமான மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கவில்லை என்றும், விமானம் ஆப்கானிஸ்தானுக்கு  தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தின் பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளதாகவும் ரஷ்யாவில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாயமான மலேசிய விமானம் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தரை இறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிருடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு மண் குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவின்றி தவிக்கின்றனர் என்று ரஷ்யாவின் எப்.எஸ்.பி. உளவுத்துறை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவன இதழ் ஒன்று கூறியுள்ளது.