Published:Updated:

மலேசிய விமானத்தை கடத்தியது வேற்று கிரகவாசிகளாம்!

Vikatan Correspondent
மலேசிய விமானத்தை கடத்தியது வேற்று கிரகவாசிகளாம்!
மலேசிய விமானத்தை கடத்தியது வேற்று கிரகவாசிகளாம்!
மலேசிய விமானத்தை கடத்தியது வேற்று கிரகவாசிகளாம்!

வாஷிங்டன்: மயாமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி, 239 பேருடன் மலேசியா நகர் கோலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவில் சிஎனென், ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் மலேசிய விமானம் குறித்து, பொதுமக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் கலந்து கொண்ட பலர் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர். விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சிலரும், பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என இன்னும் சிலரும் கூறியுள்ளார்.

மேலும், இந்த சர்வேயில் கலந்து கொண்ட 9 சதவீதத்தினர் மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர்.