Published:Updated:

ஐ.நா. அமைதிப்படைக்கு முதல் பெண் கமாண்டர் நியமனம்!

ஐ.நா. அமைதிப்படைக்கு முதல் பெண் கமாண்டர் நியமனம்!
ஐ.நா. அமைதிப்படைக்கு முதல் பெண் கமாண்டர் நியமனம்!
ஐ.நா. அமைதிப்படைக்கு முதல் பெண் கமாண்டர் நியமனம்!

நியூயார்க்: ஐ.நா. அமைதிப்படைக்கு முதல்முறையாக ஒரு பெண் கமாண்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் சைப்ரஸ் பகுதியில் நடைபெறும் அமைதி பாதுகாப்புப் பணிக்கு முதல் பெண் தளபதியை நியமிப்பதாக நேற்று தகவல் வெளியிட்டார்.

நார்வேயைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கிறிஸ்டின் லுண்ட் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் சீனாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாவோ லியுவிடமிருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் சைப்ரஸ் பிரிவுக்கும், கிரீசிற்கும் இடையில் உள்ள 112 மைல் நிலப்பரப்பும், 900 ராணுவத்துருப்புகள் அடங்கிய காவல் துறையும் இவரது கண்காணிப்பின் கீழ் செயல்படும். கடந்த 1974 ஆம் ஆண்டு கிரீசில் நடந்த ராணுவப் புரட்சியின் விளைவாக சைப்ரஸ் நாட்டை துருக்கி தாக்கியது. இதனால் பாதிப்படைந்த சைப்ரஸ் பகுதிக்கு இந்த அமைப்பு நிதி மற்றும் அரசியல் ஆதரவு வழங்கி வருகின்றது.

இந்தப் பொறுப்பினை ஏற்பதாக அறிவித்த பின்னர் கிறிஸ்டின் லுண்ட் நியூயார்க்கில் உள்ள ஐ.நா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனையும், அமைதிப் பணிக்கான உள்துறை பொதுச் செயலரான ஹெர்வ் லாட்சசையும் சந்தித்தார். ராணுவ கட்டளை மற்றும் ஊழியர்களுடனான பணி நிர்வாகத்தில் லுண்ட் 34 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தினைக் கொண்டவர் என்று பான்-கி-மூன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.