Published:Updated:

இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா

விகடன் விமர்சனக்குழு
இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா
இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா
இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம்: அமெரிக்கா

வாஷிங்டன்: "இந்தியாவில் அமையும் புதிய அரசுடன் இணைக்கமாக செயல்பட தயாராக இருக்கிறோம்" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண செய்தித்தொடர்பாளர் ஜென் பிசாகி கூறுகையில், "மனித வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பங்கேற்ற இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் இந்திய மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களுடன் செயல்பட அமெரிக்கா எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இந்தியாவில் நடந்த இந்த தேர்தல் அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளின் ஜனநாயக செயல்முறைக்கு எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் ஜனநாயகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருநாட்டு மக்களின் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இந்தியா- அமெரிக்காவுடனான உறவு மிகவும் முக்கியமானது" என்றார்.