Published:Updated:

இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்!

விகடன் விமர்சனக்குழு
இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்!
இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்!
இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்!

ரோம்: இத்தாலியில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 14 பேர் பலியாகி உள்ளதாகவும், 200 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலியில் அகதிகளாக இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று லம்பெடுசா தீவுக்கு சென்றது. இந்நிலையில், லம்பெடுசா தீவுக்கு சுமார் 185 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது அது கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 215 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, லம்பெடுசா துறைமுக கேப்டன் கூறுகையில், ''கப்பலில் எத்தனை பேர் வந்தனர் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.