Published:Updated:

ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதி!

ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதி!
ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதி!
ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதி!

பெய்ஜிங்: மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீனா அனுமதி அளித்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் கட்டாயமாக நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை மீறி குழந்தை பெற்றால் கடும் அபராதம் விதித்தல் மற்றும் கட்டாய கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

எனவே, அங்கு இளைஞர்களின் பெருக்கம் குறைந்து விட்டது. குறிப்பாக பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்ததால் மணப் பெண் தட்டுப்பாடு சீனாவில் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு, ஒரு குழந்தை திட்டத்துக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கவும், நாட்டில் மனித வள சக்தியை மேம்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகளை கூடுதலாக பெற்றுக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் தொகை 11 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.