Published:Updated:

உ.பி. பாலியல் வன்கொடுமை: பான் கீ மூன் கண்டனம்

Vikatan Correspondent
உ.பி.  பாலியல் வன்கொடுமை: பான் கீ மூன் கண்டனம்
உ.பி. பாலியல் வன்கொடுமை: பான் கீ மூன் கண்டனம்
உ.பி.  பாலியல் வன்கொடுமை: பான் கீ மூன் கண்டனம்

ஐ.நா.: உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள பான் கி மூன், ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளாகதான் இருப்பார்கள் என அம்மாநில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்தினை சமூகம் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நைஜீரியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கடந்த இரு வாரங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வெறுக்கத்தக்க தாக்குதல்கள் நடந்து வருவதையும் பான் கி மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை, அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விவகாரம் என பார்க்கவேண்டும் என கூறியுள்ள பான் கீ மூன், இரு பால் சமநிலைக்கு வித்திடும் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.