Published:Updated:

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: மறுக்கும் ஜெயசூரியா

Vikatan Correspondent
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: மறுக்கும் ஜெயசூரியா
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: மறுக்கும் ஜெயசூரியா
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: மறுக்கும் ஜெயசூரியா

கொழும்பு: ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தான் தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரியா தெரிவித்தார்.

கிரிக்கெட் மைதானத்தில் பந்துகள் உடைய, கிரிக்கெட் மட்டையால் பந்துகளை விளாசிய மாஸ்டர் பிளாஸ்டர் என்ற சனத் ஜெயசூரியா, தற்பொழுது மாணவர்களின் மண்டைகளை பிளந்து வருவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

'தேசத்துக்கு மகுடம்' என்ற  கண்காட்சியை ருகுணு பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த போது சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்ததுடன், தாக்குதல் நடத்தியதாக கூறபட்டவர்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரியா இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், மாணவர் மீது தான் தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை சனத் ஜெயசூரியா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமமக்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே தான் மூன்று தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சென்றதாகவும், தனது கிராமத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை தனக்கு இருக்கிறது.

ருகுணு பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நடத்த வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட நான் 10, 15 நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கவில்லை.

கிராம மக்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை பெற்றுக்கொண்டு நான் ஜனாதிபதியைச் சந்திக்க புறப்பட்டு விட்டேன். எவராவது தாக்குதலுக்கு உள்ளானதாகவோ, காயமடைந்து மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவோ காவல்துறையில் புகார் செய்யப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது" என்று கூறியுள்ளார்.