Published:Updated:

ஆப்கானிஸ்தான்: தமிழக பாதிரியார் கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது!

Vikatan Correspondent
ஆப்கானிஸ்தான்: தமிழக பாதிரியார் கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது!
ஆப்கானிஸ்தான்: தமிழக பாதிரியார் கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது!
ஆப்கானிஸ்தான்: தமிழக பாதிரியார் கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது!

காபூல்: தமிழக பாதிரியார் பிரேம்குமார் கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் பிரேம்குமார் ஆப்கானிஸ்தான், ஹெராட் பகுதியில் வைத்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரின் கடத்தலின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் இருப்பதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாதிரியார் பிரேம்குமார் கடத்தல் தொடர்பாக ஒருவரை கைது செய்திருப்பதாக, இந்திய அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிலான் மாவட்டத்தில் பாதிரியார் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.