Published:Updated:

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்!

Vikatan Correspondent
இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்!
இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்!
இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்!

நியூயார்க்: இலங்கையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நிறைவேற்ற வேண்டும் என  வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் இன ரீதியான மோதல்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து, வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் சாகி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு நாட்டை அமைதியான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.