Published:Updated:

வடமாகாண சபையின் அதிகாரங்களை தடுப்போர் துரோகிகள்: விக்னேஸ்வரன் சாடல்

Vikatan Correspondent
வடமாகாண சபையின் அதிகாரங்களை தடுப்போர் துரோகிகள்: விக்னேஸ்வரன் சாடல்
வடமாகாண சபையின் அதிகாரங்களை தடுப்போர் துரோகிகள்: விக்னேஸ்வரன் சாடல்

யாழ்ப்பாணம்: வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.
 

வடமாகாண சபையின் அதிகாரங்களை தடுப்போர் துரோகிகள்: விக்னேஸ்வரன் சாடல்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் அடங்கிய குழுவினர், துணுக்காய் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். அதில் பேசிய விக்னேஸ்வரன், நான் துரோகி என்று சிலரைக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்தன. இதுவரை நான் துரோகி என யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் இன்று இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுகின்றேன். அதற்கான காரணங்கள் நிறையவே உண்டு.

குறிப்பாக வடக்கு மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்யவேண்டியுள்ளது. இந்த அபிவிருத்திகளுக்கு எத்தனையோ பேர் உதவத் தயாராக இருக்கின்றனர். எம்முடன் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அத்தகைய உதவிகள் வந்து சேர்வதற்குப் பலர் தடையாக இருக்கின்றனர்.

குறிப்பாக வடக்குக்கு கிடைக்கும் உதவிகளைத் தமக்கும் பங்குபோட அவர்கள் எண்ணுகின்றனர். தங்கள் மூலமாகவே அந்த உதவிகள் வந்து சேரவேண்டும் என்று கருதுகின்றனர். இதனால் எமக்கு நேரடியாகக் கிடைக்கும் உதவிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே துரோகிகள்" என்றார்.