Published:Updated:

தீபாவளி, ரம்ஜானுக்கு விடுமுறை கிடையாது: இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

Vikatan Correspondent
தீபாவளி, ரம்ஜானுக்கு விடுமுறை கிடையாது: இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
தீபாவளி, ரம்ஜானுக்கு விடுமுறை கிடையாது: இங்கிலாந்து அரசு அறிவிப்பு!
தீபாவளி, ரம்ஜானுக்கு விடுமுறை கிடையாது: இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

லண்டன்: தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளுக்கு தேசிய விடுமுறை அளிக்க முடியாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகை தினங்களுக்கு இங்கிலாந்தில் அரசு விடுமுறை வழங்க வேண்டும் என இந்து, இஸ்லாம் மதத்தை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 21 ஆயிரத்து 843 பேர் கையெழுத்திட்டு ஆன் லைன் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

நீண்ட காலமாகவே இங்கிலாந்தில் வசித்து வரும் இந்து மற்றும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி, ரம்ஜானுக்கு தேசிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு அனுப்பும் கோரிக்கைகளை பரிசீலிக்க இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனி கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளை இங்கிலாந்தில் ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர். பண்டிகைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இருந்த போதிலும் அதற்காக அவற்றை தேசிய விடுமுறை தினங்களாக அறிவிக்க முடியாது. அதிகமான பொது விடுமுறை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதும் அரசு, அதேவேளையில் மக்களின் உணர்வுகளையும் மதிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.