Published:Updated:

ஆப்கானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதலுக்கு லஷ்கரே காரணம்: அமெரிக்கா

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கமே காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹீராட் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது,  கடந்த மே மாதம் 23ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி, குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 26ஆம் தேதி பதவியேற்க இருந்த நிலையில், தீவிரவாதிகள் இந்திய தூதரக அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கமே பொறுப்பு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.