Published:Updated:

இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்?

இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்?
இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்?
இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்?

கொழும்பு: கொழும்பில் உள்ள முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த பொதுபல சேனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை, அலுதமாவில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் கொழும்பில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் பொதுபல சேனா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 29ஆம் தேதி கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி கருத்தரங்கம் ஒன்றை நடத்த பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுபல சேனா ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவே இந்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கருத்தரங்கத்தைத் தொடர்ந்து கொழும்பின் முக்கிய பகுதி ஒன்றில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பொதுபல சேனா அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக மதக்கலவரத்தை ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், முஸ்லிம்களின் வர்த்த நிலையங்களின் மீதும் தாக்குதல் நடத்தி, அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.