Published:Updated:

'ஆர்குட்' செயல்பாட்டை நிறுத்துகிறது 'கூகுள்'!

Vikatan Correspondent
'ஆர்குட்' செயல்பாட்டை நிறுத்துகிறது 'கூகுள்'!
'ஆர்குட்' செயல்பாட்டை நிறுத்துகிறது 'கூகுள்'!
'ஆர்குட்' செயல்பாட்டை நிறுத்துகிறது 'கூகுள்'!

பிரபல தேடுதல் வலைத்தளமான ஆர்குட் வலைத்தளத்தின் செயல்பாடு வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம்  அறி்வித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஆர்குட் வலைத்தளம் கூகுள் நிறுவனத்தின் முதல் சமூக வலைத்தளமாகும். ஃபேஸ்புக் அறிமுகம் செய்யப்பட்ட அதே ஆண்டில் தொடங்கப்பட்ட ஆர்குட், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது.

எனினும் கடந்த 10 ஆண்டுகளில் கூகுள் பிளஸ் உள்ளிட்ட தளங்கள் பிரபலம் அடைந்ததால் ஆர்குட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஆர்குட்டின் செயல்பாட்டை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.