Published:Updated:

கோத்தபயக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?

Vikatan Correspondent

கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் சாட்சியாளராக, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ரகசிய நடவடிக்கைகளை கொழும்பில் உள்ள தனது நாட்டு தூதரகத்தின் மூலமாக அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பொன்சேகா அரசுடன் இணைக்கமாக இருந்தபோது , அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது, ஒல்கோஹோமா நகர பாதுகாப்புத்துறை, சரத் பொன்சேகாவை விசாரணைக்கு அழைத்திருந்தது.

எனினும் இந்த விசாரணைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவில் இருந்து சரத் பொன்சேகா வெளியேறி விட்டதாகவும், கோத்தபயவின் உத்தரவின் பேரிலேயே அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

அப்போது், கோத்தபய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரத் பொன்சேகாவை சாட்சியாக பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. எனினும் அரசுடன் நட்புறவை பேணியதால், சரத் பொன்சேகா இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

ஆனால் தற்போது இரண்டு தரப்புக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகாவை சாட்சியாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியை அமெரிக்கா மீண்டும் கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.