Published:Updated:

75 வயதில் முதல் காதல்; 18 வயது சிறுமியை 78 வயதில் மணந்த முதியவர்!

ரஷெட் மங்காகோப், ஹலிமா அப்துல்லா ( twitter )

பிலிப்பைன்ஸை சேர்ந்த 78 வயது முதியவர் ரஷெட் மங்காகோப் என்பவர், தன்னுடைய காதலியான 18 வயதான ஹலிமா அப்துல்லாவை மணந்தார்.

75 வயதில் முதல் காதல்; 18 வயது சிறுமியை 78 வயதில் மணந்த முதியவர்!

பிலிப்பைன்ஸை சேர்ந்த 78 வயது முதியவர் ரஷெட் மங்காகோப் என்பவர், தன்னுடைய காதலியான 18 வயதான ஹலிமா அப்துல்லாவை மணந்தார்.

Published:Updated:
ரஷெட் மங்காகோப், ஹலிமா அப்துல்லா ( twitter )

காதலுக்கு வயதில்லை என்பார்கள். அந்தக் கூற்றை மெய்ப்பிக்கும்விதமாக பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 78 வயது முதியவர் ரஷெட் மங்காகோப் என்பவர், தன்னுடைய காதலியான 18 வயதான ஹலிமா அப்துல்லாவைக் கரம்பிடித்திருக்கிறார். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ரஷெட் மங்காகோப் இத்தனை வயதுவரை யாரையும் காதலித்ததுமில்லை, திருமணம் செய்துகொண்டதுமில்லை என்பதுதான்.

காதல்
காதல்
சித்திரிப்புப் படம்

ஹலிமா அப்துல்லாதான் இவருடைய முதல் காதலி, முதல் மனைவி. ரஷெட் மங்காகோப் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிலிப்பைன்ஸின் ககாயன் மாகாணத்தில் ஓர் இரவு விருந்தில் ஹலிமாவைச் சந்தித்தார். அன்றிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்துவந்த ரஷெட் மங்காகோப்பும், ஹலிமாவும், ஆகஸ்ட் 25-ம் தேதியன்று திருமணம் செய்துகொண்டனர். காதலுனுக்கும், காதலிக்கும் கிட்ட்டத்தட்ட 60 வயது இடைவெளியிருந்தபோதிலும், இரு குடும்பத்தினருமே இவர்களின் திருமணத்துக்கு சம்மதித்தது மற்றுமொரு சிறப்பு.

ரஷெட் மங்காகோப், ஹலிமா அப்துல்லா
ரஷெட் மங்காகோப், ஹலிமா அப்துல்லா
twitter

இப்போது புதுமணத் தம்பதியான இவர்கள், கார்மென் நகரிலுள்ள புதிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டப்படி, 21 வயதுக்கு குறைவான ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதத்தையும் பெற வேண்டும்.