Published:Updated:

பாகிஸ்தான்: பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு... 30 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

குண்டுவெடிப்பு நடந்த பள்ளிவாசல் ( ட்விட்டர் )

குண்டுவெடிப்பில் இதுவரை 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேர் உயிருக்குப் போராடிவருகின்றனர்

பாகிஸ்தான்: பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு... 30 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

குண்டுவெடிப்பில் இதுவரை 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேர் உயிருக்குப் போராடிவருகின்றனர்

Published:Updated:
குண்டுவெடிப்பு நடந்த பள்ளிவாசல் ( ட்விட்டர் )

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இன்று மதியம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெஷாவர் நகர் தலைமை காவல்துறை அதிகாரி இஜாஸ் அஹ்சன் கூறியதாவது, ``பெஷாவர் நகர் கிஸ்ஸா குவானி பஜார் பகுதிக்கு அருகேயுள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும்போது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

தாக்குதல் நடத்தவந்த இருவர், பள்ளிவாசலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களைத் தடுக்க பாதுகாப்பு காவலர்கள் முயன்றபோது துப்பாக்கியால் அவர்கள் சுடத் தொடங்கினர். இந்த நிலையில்தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த பள்ளிவாசல்
குண்டுவெடிப்பு நடந்த பள்ளிவாசல்
ட்விட்டர்

இதன்படி முதற்கட்ட தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. மேலும், இதுவரை எந்தக் குழுவும் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை" எனத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக லேடி ரீடிங்கின் மீடியா மேலாளர் அசிம் கான் கூறுகையில், ``இதுவரை 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேர் உயிருக்குப் போராடிவருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இம்ரான் கான்
இம்ரான் கான்

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும்" என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism