Published:Updated:

30 வயதில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் `மிஸ் அமெரிக்கா'; என்ன காரணம்?

Cheslie Kryst ( Instagram Photo: @chesliekryst )

இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன், கிரிஸ்ட் தனது இன்ஸ்டாகிராமில் தன் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதில், `இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் தரட்டும்' என்று கேப்ஷன் செய்திருக்கிறார்.

அமெரிக்காவில், 2019-ம் ஆண்டு `மிஸ் அமெரிக்கா' பட்டம் வென்றவர் செஸ்லி கிறிஸ்ட். `எக்ஸ்ட்ரா' என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள அவரது அப்பார்ட்மென்ட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் கிறிஸ்ட். தற்கொலை என்ற கோணத்தில் போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

அடிப்படையில் வழக்கறிஞரான கிறிஸ்ட், அழகிப் போட்டியில் வெற்றிபெற்றதை தொடந்து, `எக்ஸ்ட்ரா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் புகழ்பெற்றார்.

Cheslie Kryst
Cheslie Kryst
Instagram Photo: @chesliekryst

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரது சிறப்பான பொழுதுபோக்கு தொகுப்பாளர் பணிக்காக இரண்டு முறை டேடைம் எம்மி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றார். அவரது மரணத்தை தொடர்ந்து, `எக்ஸ்ட்ரா' குழுவினர் தங்கள் துக்கத்தை அறிக்கை மூலம் பகிர்ந்துள்ளனர்.

இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன், கிரிஸ்ட் தனது இன்ஸ்டாகிராமில் தன் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதில், `இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் தரட்டும்' என்று கேப்ஷன் செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

30 வயதான கிறிஸ்ட், தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் வணிகப் பட்டம் பெற்றார். பின்னர் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் சட்டம் பயின்றார். 2017-ம் வருடம் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்த கிறிஸ்ட், சிவில் வழக்குகளில் கவனம் செலுத்தினார். குற்றம் செய்யாமல் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த கைதிகளின் விடுதலைக்கான வழக்குகளைக் கையாண்டார். தன் 28-வது வயதில் `மிஸ் அமெரிக்கா' பட்டம் வென்ற பிறகு, சட்ட நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

கிறிஸ்ட்டின் அம்மா, 2002-ல் `திருமாதி நார்த் கரோலினா' பட்டம் பெற்றவர். அந்தப் பட்டம் வென்ற இரண்டாவது கறுப்பினப் பெண் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Cheslie Kryst
Cheslie Kryst
Instagram Photo: @chesliekryst

அதேபோல, 28 வயதில் `மிஸ் அமெரிக்கா' ஆன கிறிஸ்ட், அந்தப் பட்டத்தை அதிக வயதில் வென்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 `மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற கிறிஸ்டி, முதல் 10 இடங்களுக்குள் வந்தார்.

இந்நிலையில், கிறிஸ்ட் மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு பத்திரிகையில் கிறிஸ்ட் எழுதிய கட்டுரையில், வெற்றிக்குப் பின்னால் ஓடுவதில் உள்ள தொடர் அழுத்தங்கள் பற்றியும், சமூக வலைதளங்களில், `நீ மிஸ் அமெரிக்கா ஆகத் தகுதியுடைய அழகு அல்ல' என்று தன் மீது நிகழ்த்தப்படும் ஆன்லைன் வன்முறை பற்றியும் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- வைஷ்ணவி பாலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism