Published:Updated:

விமான விபத்துக்கு உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பரஸ்பர குற்றச்சாட்டு!

கீவ்: மலேசிய விமான விபத்துக்கு உக்ரைன் அரசும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

விமான விபத்துக்கு உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பரஸ்பர குற்றச்சாட்டு!

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக எம்.எச்.17 விமானம் ஒன்று 298 பேருடன் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, ரஷ்ய எல்லைப் பகுதியான கிழக்கு உக்ரைனுக்கு அருகே விமானம் பறந்தபோது திடீரென சுட்டுவீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை பல்வேறு நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. உக்ரைன் அரசு கூறும் குற்றச்சாட்டை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். மேலும், உக்ரைன் போர் விமானமே ஏவுகணை மூலம் வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், உக்ரைன் விமானம் ஒன்றை தாக்கியதாக கிளர்ச்சியாளர்களின் கமாண்டர் ஒருவர் கூறியிருப்பதால், மலேசிய விமானத்தின் மீது கிளர்ச்சியாளர்களே தவறுதலாக தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு