Published:Updated:

மலேசிய விமான விபத்து: உக்ரைன் வான் எல்லையை புறக்கணிக்க விமான நிறுவனங்கள் முடிவு!

Vikatan Correspondent

கீவ்: மலேசிய விமானம் திடீரென நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதை அடுத்து உக்ரைன் வான் எல்லையை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய உக்ரைன் நாட்டின் வான் எல்லையை புறக்கணிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய எல்லையருகே, மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது. ஏவுகணை மூலம் விமானம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், உக்ரைன் வான் எல்லை வழியே பறக்க வேண்டாம் என ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களை இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனை ஏற்று, மாற்று வழித்தடத்தில் விமானங்களை இயக்க ஏர் இந்தியாவும் ஜெட் ஏர்வேசும் முடிவு செய்துள்ளன.

இதேபோல் லூப்தான்சா, மலேசியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களும், உக்ரைனில் சர்ச்சைக்குரிய கிழக்குப் பகுதி வான் எல்லை வழியே விமானங்களை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளன. உக்ரைனில் உள்நாட்டுப்போர் நடப்பதால், அந்நாட்டு வான் எல்லையை பயன்படுத்த வேண்டாம் என விமானிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.