Published:Updated:

போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்!

Vikatan Correspondent
போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்!
போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்!
போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்!

காஸாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட 5 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே, ஹமாஸ் தீவிரவாதிகளும், இஸ்ரேல் படையினரும் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தனர்.

காஸா பகுதியில் உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை பாலஸ்தீனர்கள் சேகரித்துக் கொள்வதற்கு வசதியாக, ஐந்து மணி நேரத்துக்கு தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி வைக்க இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டது.

இது முடிவுக்கு வந்தவுடன், ஹமாஸ் தீவிரவாதிகள் உடனடியாக ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், காஸா பகுதியில் பாலஸ்தீனிய தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியிருக்கிறது.
 
நேற்றிரவு காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு தகுந்தப் பதிலடி கொடுப்போம் என்று ஹமாஸ் தீவிரவாத இயக்கம் கூறியுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் இதுவரை 230 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.