Published:Updated:

போரில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க சர்வதேச அறிவுரை குழுவை நியமித்தார் ராஜபக்சே!

Vikatan Correspondent

கொழும்பு: இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கும் ஆணையத்திற்கான, அறிவுரை குழுவை அந்நாட்டு அதிபர் ராஜபக்சே நியமித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் உடனான போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏராளமானோர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுக்குறித்து விசாரிக்க கடந்த ஆண்டு நீதிபதி மேக்ஸ்வெல் பிரனாக்மா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், விசாரணை ஆணையத்திற்கான மூன்று பேர் கொண்ட சர்வதேச அறிவுரை குழுவை அதிபர் ராஜபக்சே நியமித்துள்ளார். அதில், பிரிட்டனை சேர்ந்த டெஸ்மாண்டே சில்வா, ஜியோஃப்ரே நைஸ், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கிரேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கும் ஆணையம் 1990 முதல் 2009 வரையிலான காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்தது. தற்போது, இந்திய அமைதி படை வந்த காலமான 1987 முதல் 1990 வரையிலான காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.