Published:Updated:

கிளர்ச்சியாளர்களிடம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி!

Vikatan Correspondent
கிளர்ச்சியாளர்களிடம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி!
கிளர்ச்சியாளர்களிடம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி!
கிளர்ச்சியாளர்களிடம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி!

கீவ்: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் நேற்று மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள், 15 பணியாளர்கள் என மொத்தம் 298 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புபெட்டி சிக்கியுள்ளது. அந்த பெட்டியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் அது தங்கள் வசம் இருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அந்த கருப்பு பெட்டியை ஆராய்ந்தால் விமானம் விபத்துக் குள்ளானதா? ஏவுகணை மூலம் தாக்கப்பட்டதா? அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்று தெரியவரும்.