Published:Updated:

ரூ.33 கோடி மதிப்புள்ள கலைப்பொருள்கள் கடத்தல்... இந்தியாவிடம் திருப்பி அளித்த அமெரிக்கா!

கலைப்பொருள்கள்

சிலைக் கடத்தல் சுபாஷ் கபூர் திருடிய பெரும்பாலான சிலைகள்தான் தற்போது அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டுள்ளன.

இந்தியக் கலைப்பொருள்கள் மற்றும் சாமி சிலைகள் போன்றவை பணத்துக்காகக் கடத்தப்பட்டு, பலநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய பொருள்களை மீட்கும் முயற்சியல் இந்தியா ஈடுபட்டு வந்தாலும், கடத்தப்பட்ட பல பொருள்கள் இன்னும் தெரியாமலே உள்ளன.

இந்நிலையில், நம் நாட்டுக்குச் சொந்தமான 4 மில்லியன் டாலர் மதிப்பிலான, (இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய்) 307 பழங்கால பொருள்களை, இந்தியாவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திரும்பக் கொடுத்துள்ளனர்.

ரூ.33 கோடி மதிப்புள்ள கலைப்பொருள்கள் கடத்தல்... இந்தியாவிடம் திருப்பி அளித்த அமெரிக்கா!

இவற்றில் பெரும்பாலானவை, கடத்தலில் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டவை. சிலைக்கடத்தல் சுபாஷ் கபூர் திருடிய பெரும்பாலான சிலைகள்தான், தற்போது அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டுள்ளன. இவர் இந்தியாவில் திருடிய பல தொன்மையான பொருள்களை, அமெரிக்காவில் விற்று வந்துள்ளார். அதைத் தொடர்ந்து ஜெர்மனியில் கைது செய்யப்பட்டவர், 2012-ம் ஆண்டு முதல், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் வெளியிட்ட அதிகாரபூர்வ வெளியீட்டில், ``இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட 307 பழங்கால பொருள்களில் 235 பொருள்கள் சுரேஷ் கபூரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்டன. ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் இருந்தும் கடத்தல் நடக்க சுபாஷ் உதவியுள்ளார்.

ரூ.33 கோடி மதிப்புள்ள கலைப்பொருள்கள் கடத்தல்... இந்தியாவிடம் திருப்பி அளித்த அமெரிக்கா!

கலைப்பொருள்கள் விற்பனையாளரான நான்சி வெய்னர் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பழங்கால பொருள்கள் ஐந்து கைப்பற்றப்பட்டன; நயீப் ஹோம்ஸியிடம் நடைபெற்ற விசாரணையில் ஒரு பொருள் கைப்பற்றப்பட்டது. இவற்றைத் தவிர மீதமுள்ள 66 தொல்பொருள்கள் சிறிய கடத்தல் நெட்வொர்க்குகளால் இந்தியாவில் இருந்து திருடப்பட்டவை.

நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வுத்துறை துணை சிறப்பு அதிகாரி டாம் லாவ் ஆகியோர் பங்குபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்குச் சொந்தமான பழைமையான 307 பொருள்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.