Published:Updated:

உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி ராஜபக்சே: சொல்கிறார் பில்கேட்ஸ்

உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி ராஜபக்சே: சொல்கிறார் பில்கேட்ஸ்
உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி ராஜபக்சே: சொல்கிறார் பில்கேட்ஸ்
உலக தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி ராஜபக்சே: சொல்கிறார் பில்கேட்ஸ்

இலங்கையில் சமூக – பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக அதிபர் ராஜபக்சே மேற்கொண்டுள்ள முதலீடு மற்றும் முயற்சிகளை பாராட்டியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், ராஜபக்சே மற்ற உலகத் தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் ராஜபக்சேவால் தொடங்கி வைக்கப்பட்ட இலங்கையின் ‘நனசெல’ நிகழ்ச்சித் திட்டம், கிராமிய மட்டத்திற்குரிய மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப செயற்திட்டத்திற்கான விருதினை பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் மன்றத்திடமிருந்து இலங்கை பெற்றுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா, கடந்த 18 ஆம் தேதி பிரான்சில், லியோனில் மன்றத் தலைவர் கேட்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த விருதை வழங்கி பேசிய பில்கேட்ஸ், அபிவிருத்தியின் போது முகம் கொடுக்க வேண்டிய சவால்களுக்கும், மக்களின் வாழ்க்கை தரத்தில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் தகவல் தொழில்நுட்பமே அசாதாரண சக்தியை கொண்டுள்ளது என்பதை அதிபர் ராஜபக்சேவும், அவரது அரசும் நன்கு புரிந்து வைத்துள்ளது.

வசதி குறைந்த மக்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அதிபர் ராஜபக்சே காட்டிய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புகளை பாராட்டுக்குரியது.

இதுபோன்ற சிறந்த தலைமைத்துவம் மேற்படி முக்கியமான துறைக்கு இன்றியமையாதது. இதனை ஏனைய உலகத் தலைவர்கள் முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும்" என்று கூறினார்.