Published:Updated:

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 469 குழந்தைகள் பலி: யுனிசெப் தகவல்!

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 469 குழந்தைகள் பலி: யுனிசெப் தகவல்!
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 469 குழந்தைகள் பலி: யுனிசெப் தகவல்!
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 469 குழந்தைகள் பலி: யுனிசெப் தகவல்!

ஐ.நா.: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்; 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் இருக்கும் இடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் மொத்தம் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட 9 குழந்தைகளும் அடக்கம்

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 469 குழந்தைகள் பலி: யுனிசெப் தகவல்!

என்றும், காஸா பகுதியில்  குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காஸாவில் ஓராண்டு காலம் பணிபுரிந்து அனுபவம் பெற்ற யுனிசெப் அதிகாரி ஒருவர் கூறுகையில், காஸாவில் எந்த ஒரு இடமும் பாதுகாப்பானதாக இருப்பதாக குழந்தைகள் கருதவில்லை என்றும், அவர்கள் மனதில் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவது தற்போது உடனடி தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

"குழந்தைகளுடன் நான் பேசுகையில் அவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சாதாரணமாக பேசுவதையே நிறுத்திக்கொண்டுவிட்டனர். மிகவும் அச்ச உணர்வுடன் இருக்கும் அவர்கள், இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர். தங்களது பெற்றோர்கள் தங்களது கண்பார்வையை விட்டு வெளியே செல்வதையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. இதுதான் காஸாவின் தற்போதைய உண்மை நிலை" என்று மேலும் கூறினார்.