Published:Updated:

துருக்கி: அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர விபத்துகள்... 32 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

துருக்கி சாலை விபத்து

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளில் 32 பேர் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துருக்கி: அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர விபத்துகள்... 32 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளில் 32 பேர் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துருக்கி சாலை விபத்து

துருக்கி நாட்டில் காசியான்டெப்(Gaziantep) மற்றும் மார்டின்(Mardin) ஆகிய இரு மாகாணங்களில் நேற்று அடுத்தடுத்த நிகழ்ந்த சாலை விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலாவதாக நேற்று காலை காசியான்டெப் மாகாணத்தின் நிசிப் நகரில், வேறொரு விபத்தின் மீட்புப்பணியில் இருந்த அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பயணிகள் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காசியான்டெப் மாகாண ஆளுநர் தாவுட் குல்(Davut Gul) அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

துருக்கி சாலை விபத்து
துருக்கி சாலை விபத்து

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே, மார்டின் மாகாணத்தின் டெரிக் நகரில், ட்ரக் ஒன்று மக்கள் கூட்டத்தில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துயிருக்கிறது. இரண்டாவதாக நிகழ்ந்த இந்த விபத்திலும் 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும், படுகாயமடைந்த 29 பேரில் 8 பேர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் துருக்கி சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா(Fahrettin Koca) தெரிவித்திருக்கிறார்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளில் 32 பேர் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.