Published:Updated:

லெபனான் வீரர் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் வெறி செயல்!

பெய்ரூட்: லெபனான் வீரர் தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்து மீண்டும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க செய்தியாளர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களில் ஜேம்ஸ் போலே கடந்த மாதம் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 2 ஆம் தேதி ஸ்டீவன் சாட்லாப் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தற்போது லெபனான் நாட்டை சேர்ந்த போர் வீரர் ஒருவரின் தலையை துண்டித்து தங்கள் வெறிச்செயலை மீண்டும் நிறைவேற்றியுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். கடந்த மாதம் லெபனான் எல்லை பகுதியான ஆர்சால் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், லெபனான் படை வீரர்களுக்கும் இடையே கடும்சண்டை ஏற்பட்டது.

அப்போது, லெபனான் படை வீரர்கள் 19 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். அவர்களில் அலி அல்-செய்யது என்பவரை கடந்த வாரம் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மற்றொரு வீரரான அப்பாஸ் மெட்லிஜ் என்பவர் தப்பி செல்ல முயற்சித்தபோது தலையை துண்டித்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். மேலும், இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு