Published:Updated:

யாழ்ப்பாணம் இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!

Vikatan Correspondent
யாழ்ப்பாணம் இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!
யாழ்ப்பாணம் இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!

கொழும்பு: இலங்கை கடற்படையினர் பிடித்து செல்லும் தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளது. அந்த படகுகளை தற்போது இலங்கை அரசு, இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டுடன் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனாலும், அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாமல் யாழ்ப்பாணம், ஊர்காவல்துறை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!

இதில்,  தொடர் மழையால் பல படகுகளில் நீர் உள்ளே சென்று மூழ்கிவிட்டதுடன், பல படகுகள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. அப்படி மூழ்கிய படகுகள் தற்போது இலங்கையில் உள்ள இரும்பு வியாபாரிகளுக்கு ஏலம் விடப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இரும்பு கடைகளுக்கு விற்பனை செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்!

அதன்படி, ஊர்காவல்துறை துறைமுகத்தில் மூழ்கி கிடக்கும் அத்தனை படகுகளையும் சுமார் 8 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு வியாபாரி ஏலம் எடுத்துள்ளதுடன், அதனை இரும்புக்காக கடலில் இருந்து எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளதுது.

இலங்கை அரசின் இத்தகைய செயல், தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.