Published:Updated:

ராஜபக்சே கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு!

Vikatan Correspondent
ராஜபக்சே கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு!
ராஜபக்சே கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு!
ராஜபக்சே கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு!

கொழும்பு: இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச ஆசிய அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேர் பங்கேற்கவுள்ளனர்.

பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான முரளிதர ராவ் மற்றும் கட்சியின் வெளிநாட்டு விவகார அழைப்பாளர் விஜய் ஜொலி ஆகியோரை இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிய சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு இன்று முதல் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அதிபர் ராஜபக்சே உரையாற்றயுள்ளார்.இந்த கூட்டத்தில் 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஆசிய சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.